சுகாதார ஆய்வாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்ட தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார ஆய்வாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சுகாதார பணிகள் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்தப் போராட்டமானது மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சைமன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சுகாதார ஆய்வாளர்களை கைது செய்ததை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. மேலும் உடனடியாக பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதில் சுகாதார ஆய்வாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.