2015ஆம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி என் வாழ்நாளில் மறக்க முடியாத நாளாக மாறி போனதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதீப் ஜான் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: “ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இதே நாள் அதிகாலை 3 மணி முதல் 4 மணி இருக்கும் வெளியில் மழை வெளுத்து கொண்டிருந்தது. கிட்டத்தட்ட 20 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் 300 மில்லி மீட்டர் வரை மழை பதிவாகி இருந்தது. தாம்பரம் செம்பரம்பாக்கம் பகுதிகளை 400 மில்லி மீட்டர் என்ற அளவிற்கு இருந்த.து மேலும் செம்பரம்பாக்கம் போன்ற ஏரிகள் திறக்கப்பட்டு மக்கள் தண்ணியில் தத்தளித்தனர்.
முதல் நாள் இரவே கிட்டத்தட்ட 3000 க்கும் மேற்பட்ட மெசேஜ்கள் குவிந்திருந்தது. மின்சாரம் இல்லை, டிவி இல்லை எனது அப்டேட்களை மட்டுமே மக்கள் நம்பியிருந்தனர். எனக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுத்தனர். எனது இயந்திரத்தனமான வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் ஏற்படுத்திக் கொடுத்தது. ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்வது என்பது எளிதானது கிடையாது. பல சவால்களுக்கு மத்தியில் நான் அதனை முடிந்த வரை செய்தேன். எனது உடல்நிலை இடம் கொடுக்கும் வரை தொடர்ந்து அப்டேட் கொடுத்தபடியே இருந்தேன். வரும் ஆண்டுகளில் பல நிபுணர்கள் இருப்பார்கள் நமது மாநிலத்தின் பெருமையாக அவர்கள் திகழ்ந்தார்கள் என்று பிரதீப் ஜான் கூறியுள்ளார்.