Categories
மாநில செய்திகள்

சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு…. நாளை முதல் சிறப்பு பேருந்துகள்…. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்…!!!

சபரிமலையில் மண்டல பூஜைக்காக கடந்த 15ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு தினமும் சிறப்பு பூஜை நடந்து வருகிறது. 40 நாட்கள் தொடர்ச்சியாக மண்டல கால பூஜைகள் நடைபெறுகிறது. பக்தர்கள் மாலை அணிந்து,  விரதமிருந்து சபரி மலைக்கு செல்வார்கள். அங்கு தினமும் 40 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மூலம் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் சென்று வர ஏதுவாக சென்னை, திருச்சி, மதுரை, கடலூர் ஆகிய இடங்களிலிருந்து பம்பைக்கு நாளை முதல் ஜனவரி 16 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

 

Categories

Tech |