கேரளா அரசை கண்டித்து இந்து மக்கள் கட்சியினர் மற்றும் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேனி மாவட்டம் கம்பத்தில் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி மற்றும் இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வலியுறுத்தியும், கேரள அரசை கண்டித்தும் நடைபெற்றுள்ளது. இதற்கு இந்து மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் காமேஸ்வரன் தலைமை தாங்கியுள்ளார்.
இதனையடுத்து இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் ஓம்கார் பாலாஜி, மாவட்ட பொதுச் செயலாளர் பாண்டியன், தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி மாவட்ட இளைஞரணி செயலாளர் தனபால், நகர தலைவர் சரவண குமார் உட்பட கட்சியினர் பலரும் இதில் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி உள்ளனர்.