தென்னாப்பிரிக்காவில் அதிக வீரியம் கொண்ட உருமாறிய புதிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது . இது ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவி வருவதனால் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் வெளிநாட்டு பயணிகள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்தியாவிலும் சர்வதேச விமான போக்குவரத்து தொடங்குவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும் சர்வதேச விமான நிலையங்களில் இருந்து இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு வந்த 2 பேருக்கு ஒமைக்ரான் கொரோனா உறுதி செயப்பட்டுள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால, தொற்று உறுதி செய்யப்பட்ட இவர்கள் இருவரும் வெளிநாட்டினர். அவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவரும் கண்காணிக்கப்பட்டு அவர்களுக்கு கொரோனா தடுப்பு நடைமுறை பின்பற்றப்படும்.
ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளது. கடுமையான அறிகுறிகள் இல்லை. தொற்று அதிகமானால் அடுத்த கட்ட சிகிச்சை அல்லது ஏழு நாட்கள் தனி நடத்தப்படுவார்கள். உலகம் முழுவதும் இதுவரை 79 நாடுகளில் 373 பேருக்கு மட்டுமே ஒமைக்ரான் உறுதியாகி உள்ளது. டெல்டா வகை கொரோனா வைரஸை விட மைக்ரான் வைரஸ் 5 மடங்கு வேகமாக பரவக்கூடியது. இதனைக் கண்டு மக்கள் அச்சப்பட வேண்டாம் அதேவேளை விழிப்புணர்வுடன் இருப்பது முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.