அக்காவை பெண் பார்க்க வந்தபோது வீட்டில் தனியாக இருந்த அவரது தங்கையை தாக்கி பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர் .
உலக நாடுகளில் பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்கள் அதிக அளவில் நிலவி வரும் நிலையில் ஆந்திர மாநிலத்தில் உள்ள அனந்தபூர் மாவட்டத்தை சேர்ந்த இரு சகோதரிகள் ஐதராபாத் அடுத்துள்ள நிஜாமாபாத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி சாப்ட்வேர் இன்ஜினியர்களாக பணிபுரிந்து வருகிறார்கள் .இதில் அக்காவின் வயது 24 தங்கையின் வயது 21 ஆகும் . இந்நிலையில்அக்காவிற்கு வரன்பார்க்கும் இணையதளத்தில் மணமகன் தேவை என்று இருவரும் பதிவு செய்திருந்தார். இப்பதிவை பார்த்த விசாகப்பட்டினம் மாவட்டம், நதிபாளையம் கிராமத்தை சேர்ந்த இளைஞன் ஜெய்சந்து இவருக்கு வயது29 ஆகும்நிலையில் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
இதைத்தொடர்ந்து அன்று காலை அந்த பெண் பியூட்டி பார்லர் சென்று வருவதாக தங்கையிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். அப்போது வீட்டுக்கு வந்த ஜெய்சந்து, அந்த பெண்ணின் தங்கையிடம் பேச்சுக்கொடுத்தபடி அவரை தாக்கி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அந்த பெண் அணிந்திருந்த அணிகலன்களை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். சில மணி நேரம் கழித்து வீட்டிற்கு அக்கா தன் தங்கை சுயநினைவின்றியும் ஆடைகளஅனைத்தும் களைந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் மயக்கம் தெளிந்த பின் தங்கையிடம் கேட்டபோது அவர் நடந்த நிகழ்வை கூறினார் .
இதன்பேரில் இருவரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெய்சந்துவை நேற்று கைது செய்தனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.