ஏனெனில் மண்ணரிப்பு உலகெங்கிலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. இதுபற்றி சர்வதேச உணவு, வேளாண் அமைப்பு இயக்குநர் பேராசிரியர் மரியா கூறும்போது, “ மண்ணரிப்பை சரியாக கையாள பல நாடுகளின் அரசாங்கங்கள் ஒருங்கிணைந்த திட்டம் தேவை” என்கிறார்.
நிலங்களின் ஆரோக்கியம் மனித வளர்ச்சி, முன்னேற்றத்திற்கு மண் முக்கியமானது. அது சரியாக இருக்கும்பட்சத்தில் முறையான சாகுபடி மூலம் தரமான உணவை உற்பத்தி செய்யலாம். பூமியிலிருந்து 95 சதவீத உணவு மற்றும் 99.9 சதவீதம் குடிநீர் கிடைக்கிறது.
கார்பன் என்ற நஞ்சுவை மண் உறிஞ்சி அனைத்து மக்களுக்கும் நன்மை கிடைக்க செய்கிறது. ஆனால் உலகம் முழுவதும் மண்ணை கண்மூடித்தனமாக பயன்படுத்துகின்றனர். இதன் விளைவாக உணவு உற்பத்தி பாதிப்பு, மண்ணரிப்பு ஏற்படுகிறது. ஒரு கைப்பிடி அளவுள்ள மண்ணில் 45 விழுக்காடு கனிமப் பொருட்கள் உள்ளன.மண்ணில் வாழும் நுண்ணுயிர்கள் ஒரு கிராம் மண்ணில் 5 ஆயிரத்திலிருந்து 7 ஆயிரம் வரையிலான பாக்டீரியாக்களும், ஒரு ஏக்கர் மண்ணில் ஐந்திலிருந்து 10 டன் வரையிலான எண்ணிக்கையில் பல்வேறு வகையான உயிர்களும் வாழ்கின்றன.
பயிர் நிலமென்றால் ஏக்கர் ஒன்றில் 1.4 டன் மண்புழுக்கள் வாழ்வதுடன், அப்புழுக்கள் ஆண்டொன்றுக்கு 15 டன் அளவிற்கு செறிவான மண்ணை உருவாக்குகின்றன. இதுதொடர்பான கவலையை பசுமைப் புரட்சியின் தந்தை சுவாமிநாதன் வெளிப்படுத்துகிறார்.
மண்ணில் மோசமான தரத்துடன் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் போது அது மக்களின் ஆரோக்கியத்தில் பிரச்னையை ஏற்படுத்துகிறது. மரக்கன்றுகளை நடவு செய்வதன் மூலம் மண்ணின் அரிப்பைத் 80 சதவீதம் தடுக்கலாம்.
உலகம் முழுவதும் இதுவரை 33 சதவீத மண்ணரிப்புக்கு ஆளானது. மண்ணரிப்பு நீர்த்தேக்கங்களின் சேமிப்பு திறனைக் குறைக்க வழிவகுக்கும். மாசு மற்றும் நீரின் தரம், உயிரினங்களுக்கு சிக்கலை ஏற்படுகிறது.ஏரிகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. ஆப்பிரிக்க நாடுகளிலும், இந்திய மாநிலங்களிலும் இடம்பெயர்வு காணப்படுகிறது. அந்த மாநிலங்கள் மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர், பீகார், ஜார்க்கண்ட் மற்றும் ஒடிசா உள்ளிட்டவை.
இந்தியா போன்ற விவசாய நாடுகளுக்கு இதுமுக்கிய பிரச்னையாகும். மண்ணரிப்பை தடுக்க திட்டங்கள் நமக்கு தேவை. அந்த வகையில், கரிம வேளாண்மை, உரங்களின் குறைந்த பயன்பாடு மற்றும் வெவ்வேறு பயிர்கள் பயிரிடல் ஆகியவை மண்ணரிப்பை சரி செய்ய உதவும்.
முக்கியமாக அரசாங்கங்கள் இதுபற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதில் கவனம் செலுத்தவேண்டும். குறிப்பாக விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு தேவை. ஒரு அங்குலம் மண் உருவாக சுமார் ஆயிரம் ஆண்டுகள் பிடிக்கும். மண் தங்கத்துக்கு சமமானது. ஜீவராசிகளின் உயிர் நாடி. அதனை பாதுகாத்தல் அவசியம்.!