தாய் ஒருவர் தன்னுடைய குழந்தையை சிறுத்தையிடம் இருந்து மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கிரா ண்பாய். இவர் தன்னுடைய 3 குழந்தைகளுடன் தன்னுடைய கணவருக்காக காத்துக் கொண்டிருந்துள்ளார். இந்த நிலையில் திடீரென்று கண்ணிமைக்கும் நேரத்தில் புதரில் இருந்து வந்த சிறுத்தை இவரின் ஆறு வயது குழந்தை ராகுலை கவ்விக் கொண்டு சென்றுள்ளது. இதனால் பதறிப்போன தாய் கிரண் ஓடிப்போய் சிறுத்தையின் கால்களை பிடித்து இழுத்து போராடி குழந்தையை சிறுத்தையிடம் இருந்து மீட்டுள்ளார்.
இதனை அடுத்து கிராம மக்கள் அங்கு ஓடிவந்து சிறுத்தை விரட்டியுள்ளனர். இதனால் சிறுத்தை அங்கிருந்து ஓடி போய் மறைந்துள்ளது. தன்னுடைய குழந்தையை சிறுத்தையிடம் இருந்து காப்பாற்றிய இந்த சம்பவம் இணையத்தில் வைரலானதையடுத்து இந்த சிங்க தாய்க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.