சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள சாமுண்டிபுரம் பகுதியில் வைத்து ஒரு கும்பல் சூதாட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக வேலம்பாளையம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனைப் பார்த்த சூதாட்ட கும்பல் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். ஆனால் காவல்துறையினர் அனைவரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் சூதாட்டத்தில் ஈடுபட்டது அதே பகுதியில் வசிக்கும் சசிகுமார், பாஸ்கர், மனோஜ், சுரேஷ்குமார், சுதாகரன், செல்வராஜ், ராஜ்குமார், பைரோஸ்கான், பிரபு, சரவணன், ஆனந்தன், மணிகண்டன் மற்றும் சக்திவேல் என்பதை காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் 13 பேரையும் கைது செய்ததோடு அவர்களிடமிருந்து 44 ஆயிரத்து 400-ரையும் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.