Categories
மாநில செய்திகள்

மீண்டும் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்….. இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு….!!

தமிழக அரசு ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை அடிக்கடி பணியிடமாற்றம் செய்து வருகின்றன. அந்த வகையில் கடந்த 30 ஆம் தேதி 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்ய அறிவிப்பு வெளியானது. அதில் நீலகிரி மாவட்ட முன்னாள் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து ஆவின் நிர்வாக இயக்குனராக இருந்த கந்தசாமி பேரிடர் மேலாண்மை வருவாய் நிர்வாக ஆணையர் ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் பேரிடர் மேலாண்மை வருவாய் நிர்வாக ஆணையர் சுப்பையன் ஆவின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து 2019ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் இன்னசென்ட் திவ்யா வே இடமாற்றம் மாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதி உச்ச நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் அவரை இடமாற்றம் செய்யக் கூடாது என்று உத்தரவிட்டது. மேலும் இன்னசென்ட் திவ்யாவை நிர்வாக ரீதியான பணிகளை மேற்கொள்வதற்கு இடமாற்றம் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது என்று தமிழக அரசு சார்பில் கூறப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த 16ம் தேதி இந்த இடமாற்றம் செய்வதற்கு அனுமதி வழங்கியது.

Categories

Tech |