Categories
மாநில செய்திகள்

அச்சச்சோ! டிசம்பர்-4 முதல் தமிழகத்தில் மீண்டும் கனமழை….!!!!

அந்தமானில் உருவாகவுள்ள புயல் காரணமாக டிசம்பர் 4,5,6-ஆம் தேதிகளில் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வாக மாறியுள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், புயலாக வலுப்பெற்று ஆந்திரா-ஒடிசா இடையே டிசம்பர் 4ஆம் தேதி கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

புதிதாக உருவாக உள்ள இந்த புயலுக்கு ஜாவித் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்தமானில் உருவாகவுள்ள புயல் காரணமாக டிசம்பர் 4,5,6-ஆம் தேதிகளில், தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |