இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் பலரும் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். இவர்களுக்கு வாய்ப்பாக தமிழக அரசின் சார்பாக அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இன்று காலை 10:30 மணி அளவில் தூத்துகுடி மாவட்டத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது. பத்தாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு, டிகிரி, டிப்ளமோ, ஐடிஐ என அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம். மேலும் இது குறித்த விவரங்களுக்கு 0461-2340159 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.