புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடத்த தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவத் தொடங்கிய போது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதில் ஒரு பகுதியாக தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வந்தது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் இருந்து சட்டமன்ற கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கிலேயே நடத்தப்பட்டு வருகிறது. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகும் எம்எல்ஏ பதவி ஏற்பு, சபாநாயகர் தேர்வு, ஆளுநர் உரை என்று அனைத்து கூட்டத்தொடரும் கலைவாணர் அரங்கில் நடத்தப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் தற்போது தொற்று குறைந்து வருவதால் புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டப்பேரவை கூட்டத் தொடரை நடத்துவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது போன்று, காகிதமில்லா சட்டப்பேரவை என்ற அடிப்படையில், புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.க்களுக்கு கணிணி பொருத்தும் பணி தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலமுறை கோட்டைக்கு சென்றுள்ள ஸ்டாலின் இந்த முறை முதல்வராக கோட்டைக்குள் அடியெடுத்து வைக்கிறார்.