வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தங்கள் பதிவை 2014, 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்படும் என்று தமிழக சட்டப் பேரவையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு ஏற்கனவே மூன்று மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டது. இந்த கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று புதுப்பித்தல் சலுகை மீண்டும் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என்று அப்போது குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் 2014, 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்புக்கான பதிவை புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை மற்றும், 2017, 2018, 2019 ஆகிய ஆண்டு களில் வேலைவாய்ப்பிற்கான பதிவை புதுப்பிக்க கடந்த மே மாத அரசாணையில் வழங்கப்பட்ட கால அவகாசம் முடிந்துள்ள நிலையில், மேலும் 3 மாதங்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.