2 டோஸ் தடுப்பூசி போடவில்லை என்றால் டிசம்பர் மாதம் சம்பளம் கிடையாது என்று வெளியிட்ட உத்தரவை வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. அவ்வபோது தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு அதன் மூலம் லட்சக்கணக்கான மக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகின்றது. தற்போது வரை 12 மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளன. இதற்கிடையே ஒமைக்ரான் அச்சத்தால் தடுப்பூசி போடும் பணிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்று சுகாதார துறை உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் தடுப்பூசி போடுவதற்கு யாரும் முன் வரவில்லை. எனவே தடுப்பூசி போடாத ஊழியர்களின் ஊதியத்தை நிறுத்தி வைக்க மின்வாரியம் முடிவு செய்துள்ளதாக சுற்றறிக்கை ஒன்றை மதுரையில் நேற்று காலை வெளியிடப்பட்டது.
மேலும் அந்த அறிக்கையில் அனைத்து ஊழியர்களும் டிசம்பர் மாதத்திற்குள் தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை என்றால் சம்பளம் கொடுக்கப்படாது எனக் கூறப்பட்டிருந்தது. ஒரு தடுப்பூசி போடப்பட்டு இருந்தால் டிசம்பர் மாத ஊதியத்தை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தடுப்பூசி போடாவிட்டால் சம்பளம் கட் என்ற உத்தரவை திரும்பப் பெற்றுக்கொள்வதாக மதுரை மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் உமாதேவி தெரிவித்துள்ளார்.