Categories
உலக செய்திகள்

மறைந்த பிரபல நிபுணர்…. புகைப்படங்களை வெளியிட்ட நிறுவனம்…. அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்ட சொகுசு கார்….!!

கடந்த மாதம் அரிய வகை புற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஆடை அலங்கார நிபுணர் வடிவமைத்துள்ள ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புடைய எலக்ட்ரானிக்ஸ் சொகுசு காரின் பிக்சரை மெர்சிடெஸ் பென்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவில் ஆடை அலங்காரத்தில் மிகவும் புகழ்பெற்ற நிபுணராக விர்ஜில் அப்லோ என்பவர் இருந்துள்ளார். இவர் கடந்த மாதம் அரியவகை புற்று நோயால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் தற்போது மெர்சிடெஸ் பென்ஸ் நிறுவனம் மறைந்த விர்ஜில் அப்லோ வடிவமைத்துள்ள ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புடைய சொகுசு காரின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

அதோடு மட்டுமின்றி ஆடை அலங்கார நிபுணரான விர்ஜில் வடிவமைத்துள்ள 11/2 கோடி ரூபாய் மதிப்புடைய அந்த சொகுசு கார் ரூபெல் என்னும் அருங்காட்சியத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |