Categories
சென்னை மாவட்ட செய்திகள்

2 நாட்களாகியும் நடவடிக்கை எடுக்கல….. பொதுமக்களின் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

கழிவுநீரை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட கே.சி கார்டன் பகுதியில் பெய்த கனமழை காரணமாக வீடுகளை சுற்றி மழை நீர் தேங்கி நின்று கொண்டிருக்கிறது. மேலும் அந்த மழைநீருடன், கழிவுநீரும் கலந்து விட்டதால் துர்நாற்றம் வீசி பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் 2 நாட்களாகியும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்காததால் கோபமடைந்த பொதுமக்கள் பேப்பர் மில் சாலையில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதன் பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |