Categories
மாநில செய்திகள்

அதிமுகவில் சசிகலாவா?…. உறுப்பினர் பதவி கூட இல்ல…. முன்னாள் அமைச்சர் பொன்னையன் காட்டம்….!!!!

அதிமுகவில் சசிகலா அடிப்படை உறுப்பினராக கூட சேர்த்துக்கொள்ளப்படமாட்டார் என முன்னாள் அமைச்சர் பொன்னையன் கூறியுள்ளார்.

அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் இளைய மகளான நர்மதா-கௌதம் திருமணம் நேற்று சேலம் அருகே உள்ள சூரமங்கலத்தில் நடைபெற்றது. இதில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன், ஓ.பன்னீர்செல்வம் ,எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் பொன்னையன் நிருபர்களிடம் பேட்டியளித்தார். அதில் கூறியதாவது, சசிகலா அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது எனவும் அவரை அதிமுகவிற்குள் அடிப்படை உறுப்பினராக கூட ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் எனவும் கூறினார். மேலும் ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போதே சசிகலாவின் குடும்பத்தை ஒதுக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது என அவர் பேசினார்.

அன்வர் ராஜாவை கட்சியிலிருந்து நீக்கியது குறித்து பேசிய அவர் அது சரியான முடிவு என கூறினார். மேலும் திமுகவின் உள்கட்சி தேர்தல் எந்தப் பிரச்சினையும் இன்றி சுமுகமாக நடக்கும் எனக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர் அதிமுகவின் இரு கண்களாக இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் உள்ளனர் எனவும் அதிமுக எப்போதும் ஒற்றை தலைமையை விரும்பாது எனவும் கூறினார். மேலும் பேசிய அவர் கட்சியின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் எனவும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் எனவும் கூறினார்.

Categories

Tech |