இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் கான்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இதனிடையே இரு அணிகளுக்கிடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது .
NEWS – Injury updates – New Zealand’s Tour of India
Ishant Sharma, Ajinkya Rahane and Ravindra Jadeja ruled out of the 2nd Test.
More details here – https://t.co/ui9RXK1Vux #INDvNZ pic.twitter.com/qdWDPp0MIz
— BCCI (@BCCI) December 3, 2021
இந்நிலையில் முதல் டெஸ்டில் இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ஜடேஜா ,இஷாந்த் சர்மா மற்றும் ரஹானே ஆகிய மூவரும் காயம் காரணமாக இன்று நடைபெறும் 2-வது போட்டியில் பங்கேற்க மாட்டார்கள் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. அதேபோல் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் இடது முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக 2-வது டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகியுள்ளார். இதனால் அவருக்கு பதிலாக அணியின் கேப்டனாக டாம் லாதம் பொறுப்பேற்றுள்ளார் .