ஆம்புலன்சில் வைத்து பிரசவம் பார்த்த பெண் பணியாளரை அனைவரும் பாராட்டியுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாயனேரி பகுதியில் தையல் தொழிலாளியான முத்துக்குட்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிராமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான அபிராமிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது உறவினர்கள் அபிராமியை முனைஞ்சிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அபிராமி ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மீண்டும் வலி அதிகரித்தால் ஆம்புலன்சில் வைத்து மருத்துவ பெண் பணியாளர் அபிராமிக்கு பிரசவம் பார்த்துள்ளார். இதில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. அதன் பிறகு தாய் சேய் இருவரையும் பாளையங்கோட்டை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனையடுத்து தாய் சேய் இருவரும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.