Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மயக்க பொடியை தூவிய மர்ம நபர்கள்…. இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை…. போலீஸ் விசாரணை….!!

இளம் பெண்ணின் முகத்தில் மயக்க பொடியை தூவி மர்ம நபர்கள் தங்க நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மணலிவிளை பகுதியில் பிரதீப்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷாமிலி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 3மாதத்தில் ஒரு குழந்தை இருக்கிறது. இந்நிலையில் ஷாமிலி தனது வீட்டில் தனியாக இருந்த போது ஒரு பெண்ணும், 2 ஆணும் ஜன்னல் வழியாக எட்டி பார்த்து ஏதாவது பிச்சை போடுமா என கேட்டுள்ளனர். அதற்கு தன்னிடம் காசு இல்லை என ஷாம்லி கூறியுள்ளார். ஆனாலும் அவர்கள் வீட்டின் கதவை பலமாக தட்டி தேங்காய் அல்லது காசு ஏதாவது கொடுத்தால் தான் இங்கிருந்து கிளம்புவோம் என தெரிவித்துள்ளனர்.

இதனால் சந்தேகமடைந்த ஷாமிலி பின்பக்க கதவை திறந்து உறவினர் வீட்டிற்கு செல்ல முற்பட்டுள்ளார். இதனை பார்த்த மர்ம நபர்கள் அங்கு விரைந்து சென்று ஷாமிலியின் முகத்தில் மயக்க பொடியை தூவியுள்ளனர். இதனால் சுயநினைவை இழந்த ஷாமிலி அணிந்திருந்த 25 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து விட்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதையடுத்து ஷாமிலி மயங்கி கிடந்ததை பார்த்த அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதன் பின் உடனடியாக அவரை மீட்டு குளச்சலில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது குறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் தடவியல் நிபுணர்கள் பிரதீப்குமாரின் வீட்டில் பதிவான தடயங்களை சேகரித்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமாராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |