கொடைக்கானலில் உள்ள சீனிவாசபுரம் பகுதியில் நகராட்சி ஆரம்ப பள்ளியில் 6மாணவர்களுக்கு 2ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர் .
கொடைக்கானலில் உள்ள சீனிவாசபுரம் பகுதியில் நகராட்சி ஆரம்ப பள்ளி ஒன்று உள்ளது இங்கு மொத்தம் 6மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர் இவர்களுக்கு 2ஆசிரியர்கள் பாடம் கற்பித்து வருகின்றனர் மேலும் பள்ளியில் சமையலர் ஒருவரும் பணி புரிந்து வருகிறார் மாணவ ,மாணவிகள் அதிக நாட்கள் பள்ளிக்கு வருவதில்லை என்று கூறுகின்றனர் .மாணவர்கள் சேர்க்கை இல்லாததால் 6 மாணவர்களுக்காக 2ஆசிரியர்கள் பள்ளிக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது .இது தொடர்பாக அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது .கடந்த ஆண்டு வரை 20மாணவர்கள் படித்து வந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை கணிசமாக குறைந்து வந்துள்ளது .மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது இங்குள்ள மாணவர்களை பக்கத்து பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது .