மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி பகுதியில் லிங்கராஜா என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் கட்டிட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த பணியில் தங்க மாரியப்பன், தங்கேஸ்வரன், கண்ணன் ஆகிய 3 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வேலை பார்த்து கொண்டிருந்த போது திடீரென 3 பேர் மீதும் மின்சாரம் பாய்ந்துவிட்டது. இதில் கண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார்.
ஆனால் தங்கேஸ்வரன் மற்றும் தங்க மாரியப்பன் ஆகியோர் லேசான காயங்களுடன் உயிர் தப்பிவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கண்ணனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.