Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தங்குவதற்கு இடமில்லை…. கழிப்பறையில் வசிக்கும் மூதாட்டி…. ஆட்சியருக்கு விடுத்த கோரிக்கை…!!

வீடு இடிந்து விழுந்ததால் மூதாட்டி கழிப்பறையில் வசித்து வருகிறார்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பில்லத்தி கிராமத்தில் மூதாட்டியான அம்மாக்கண்ணு என்பவர் வசித்து வருகிறார். அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக அம்மாக்கண்ணுவின் வீடு இடிந்து விழுந்துவிட்டது. இதனால் தங்குவதற்கு இடமில்லாமல் மூதாட்டி வீட்டின் முன்பு கட்டப்பட்டுள்ள கழிப்பறையில் பொருட்களை வைத்துக் கொண்டு அதன் அருகிலேயே சமைத்து வாழ்ந்து வருகிறார்.

இதுகுறித்து மூதாட்டி கூறும் போது வீடு இடிந்தது குறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் வருவாய்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் தனிநபர் கழிப்பறை கட்டுவதற்கு மானிய தொகையான 12,000 ரூபாயை இதுவரை அதிகாரிகள் வழங்கவில்லை. அதன் பின் முதியோர் தொகை கேட்டு விண்ணப்பிக்கும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட ஆட்சியர் எனக்கு உதவுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூதாட்டி கோரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |