‘ரோஜா’ சீரியல் 1000 எபிசோடுகளை கடந்து அசத்தலான சாதனையை படைத்துள்ளது.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல்களில் ஒன்று ”ரோஜா”. இந்த சீரியலில் சிபு சூரியன் கதாநாயகனாக நடிக்க, பிரியங்கா நல்காரி ஹீரோயினாக நடித்து வருகிறார். மேலும், வடிவுக்கரசி, அக்ஷயா போன்றோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். டி.ஆர்.பி.யில் முன்னிலை வகித்து வரும் இந்த சீரியலுக்கு என்றே பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில், இந்த சீரியல் தற்போது பெரிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதன்படி, இந்த சீரியல் தற்போது 1000 எபிசோடுகளை கடந்து அசத்தலான சாதனையை படைத்துள்ளது. இதனையடுத்து, ரோஜா சீரியல் குழுவிற்கு ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.