Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வாலிபர்கள் செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய மாட்டுவண்டியை காவல்துறையினர் பறிமுதல் செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

அரியலூர் மாவட்டத்திலுள்ள சாத்தாம்பாடி கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தி ராஜ்குமாருக்கு மாட்டு வண்டியில் சிலர் சட்டவிரோதமாக மணல் கடத்துவதாக தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் விக்ரமங்கலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் சாத்தாம்பாடி பாப்பாத்தி அம்மன் கோவிலில் இருந்து சிலர் மாட்டு வண்டியில் மணல் அள்ளி கடத்தி வந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். அப்போது காவல்துறையினரை பார்த்ததும் மாட்டு வண்டியில் வந்த 2 பேர் வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாட்டு வண்டியை பறிமுதல் செய்து தப்பி ஓடிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |