மேஷ ராசி அன்பர்களே….!! இன்று நீங்கள் மனதில் பட்டதை பட்டென்று சொல்லும் நாளாக இருக்கும்.நீங்கள் எடுத்த முயற்சி அனைத்தும் வெற்றியை கொடுப்பதாக இருக்கும். மனதில் இருந்த திட்டம் செயல் வடிவம் பெறும். வியாபாரத்தில் நிலுவைப் பணியை நிறைவேற்றுவீர்கள். உபரி பண வருமானம் கிடைக்கும். புத்திரர் விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.
இன்று எச்சரிக்கையுடன் எதிலும் கொஞ்சம் ஈடுபடுங்கள் அது போதும். அவசரமாக எதையும் செய்ய வேண்டாம். சுனக்கத்தில் இருந்த காரியங்கள் வெற்றி அடைவதுடன் , பணவரவும் கூடும். உடல் சோர்வு கொஞ்சம் இருக்கும். இன்று வீண் வாக்குவாதங்கள் ஆகியவை ஏற்படும். அதுமட்டுமில்லாமல் வீண் செலவுகளும் கொஞ்சம் இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள்.
இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேறுவதற்கு கொஞ்சம் கஷ்டப்பட்டு படியுங்கள் , அதுமட்டுமில்லாமல் பாடத்தை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பாருங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும்.அது மட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் காக்கைக்கு எள் கலந்த சாதத்தை அன்னமாக கொடுங்கள். இதனால் உங்களுடைய கர்ம தோஷங்கள் நீங்கி , செல்வச் செழிப்பை ஏற்படுத்தி கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்டமான எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்