Categories
அரசியல் மாநில செய்திகள்

JUST IN: தமிழ் புத்தாண்டை மாற்றக்கூடாது…. தமிழக அரசுக்கு சசிகலா வேண்டுகோள்…!!!!

தமிழகத்தில் பல வருடங்களாகவே தமிழ் புத்தாண்டு குறித்த விவாதம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சித்திரை மாதத்தில் புத்தாண்டு கொண்டாடுவது தமிழ் வழக்கம் இல்லை. அது சமஸ்கிருத வழக்கம். தை மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் விதமாக தமிழ் புத்தாண்டு என்பது தான் திமுக தரப்பு தெரிவிக்கிறது. அதேபோல தமிழறிஞர்கள் பலரும் தை 1 தான் தமிழ் புத்தாண்டு என்று கூறிக் கொண்டுள்ளனர். மற்றொரு தரப்பினர் சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் புத்தாண்டு சித்திரை தான் என்று மீண்டும் மாற்றப்பட்டது. இதற்கிடையில் தமிழக அரசு வழங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு பையில் தைப் புத்தாண்டு என்று குறிப்பிடப்பட்டது இணையத்தில் வெளியாகியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் பரிசு பையில் தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்து என்று குறிப்பிடப்பட்டிருப்பது தமிழக அரசு மீண்டும் தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக அறிவித்த போகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது தொடர்பான விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதமாக எழுந்துள்ளது. இந்த நிலையில் தமிழ் புத்தாண்டை மீண்டும் தை மாதத்திற்கு மாற்றும் முயற்சியை கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories

Tech |