பிரபல நடிகர் அஜித் குமார் தன்னை தல என்று அழைக்க வேண்டாம் என்று ரசிகர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார் அதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் இவரது இடத்தை நிரப்ப யாராலும் முடியாது என்று கூறக் கூடிய ஒரு சில நடிகர்களில் மிக முக்கியமானவர் அஜித் குமார். இவருக்கு உலகம் முழுவதும் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரை ரசிகர்கள் தல என்று செல்லமாக அழைப்பதுண்டு. இந்நிலையில் நடிகர் அஜித்குமார் அவர்கள் தன்னை ரசிகர்கள் மற்றும் மீடியா நண்பர்கள் யாரும் தல என்று அழைக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.
அதற்கு மாறாக அஜித் என்றோ அல்லது அஜித்குமார் என்றோ அல்லது ஏகே என்றோ அழையுங்கள் என்று கூறியுள்ளார். அதற்காக அவர் காரணமும் கூறியுள்ளார். அது என்னவென்றால் தற்போது தல என்ற பட்டப் பெயரால் சமூகவலைதளங்களில் சில பிரச்சனைகள் எழுந்து வருகின்றன. பலரது மனங்கள் காயப்படுகின்றன. எனவே அதனை கருத்தில் கொண்டே தன்னை அவ்வாறு அழைக்க வேண்டாம் என்று அஜித் குமார் அவர்கள் கூறியுள்ளார்.