சசிகலா தலைமையை விரும்புவதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அதிமுக தொண்டர் ஒருவருடன் பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோவில் தொண்டர் ஒருவர், நிலைமை எப்படி இருக்கிறது என்று உங்களுக்கு தெரியும். அதிமுகவிற்கு அடையாளம் அம்மாவிற்கு பிறகு சின்னம்மா என்றுதான் நாம் கொண்டு வந்துள்ளோம் என்று கூறுகிறார்.
அதற்கு பதிலளிக்கும் விதமாக செல்லூர் ராஜு, இருக்கு அப்படித்தான் இருக்கு. நாங்களும் அதைத்தான் விரும்புகிறோம். அது முறையாக கொண்டு செல்ல வேண்டும். இல்லை என்றால் பிரச்சனை வந்து எல்லாவற்றையும் இழந்து விடுவோம். அவர்கள் கைப்பற்றி விடுவார்கள். சசிகலா விவகாரத்தில் காலம் கை மீறாது. அமைதியான தேவையான முயற்சிகளை எடுக்கிறோம் என்று பேசிஇருப்பதாகவும் செய்தி வெளியானது.
இந்த நிலையில் சசிகலாவை அதிமுகவில் அனுமதிக்க மாட்டோம், தனி மனிதரை விட கட்சியே பெரிது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். சசிகலாவுக்கு ஆதரவாக பேசியதாக சமூக வலைதளங்களில் பேசியதாக வெளியான ஆடியோ என்னுடைய குரல் அல்ல என்றும் அவர் கூறியுள்ளார். இவர் சசிகலா ஆதரவாளர் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது நேரடியாக சீண்ட ஆரம்பித்துள்ளார்.