தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கானை பகுதியில் தொழிலாளியான ஜெயராமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 பெண், ஒரு ஆண் குழந்தை இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் பாக்கியலட்சுமி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இதனை நினைத்து மன உளைச்சலில் இருந்த ஜெயராமன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெயராமனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.