‘அரண்மனை3’ படம் OTT தளத்தில் ஒரு சாதனையை படைத்துள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் சுந்தர். சி. இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”அரண்மனை3”. இந்த படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, விவேக் மற்றும் பலர் நடித்திருந்தனர். அக்டோபர் 14-ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் சமீபத்தில் ஜி5 OTT தளத்தில் வெளியானது.
இந்நிலையில், இந்த படம் OTT தளத்தில் ஒரு சாதனையை படைத்துள்ளது. அதன்படி, இந்த படம் 12 நாட்களில் 7 கோடி நிமிடங்கள் பார்வை நேரத்தை கடந்து சாதனை படைத்திருக்கிறது.
7 Crore streaming minutes in just 12 days! 🔥Watch 2021's biggest horror-comedy blockbuster #Aranmanai3 only on ZEE5https://t.co/zL2UzMUeI9 #SundarC @RaashiiKhanna_ @iYogiBabu @khushsundar @ssakshiagarwal @CSathyaOfficial @ZEE5Tamil pic.twitter.com/FCLiXeEqqr
— Arya (@arya_offl) December 1, 2021