Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக இராசிக்கு… “அன்பும் கருணையும் அதிகரிக்கும்”.. குழப்பம் நீங்கி துணிச்சல் உண்டாகும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று மனதில் அன்பும் கருணையும் அதிகரிக்கும். தொழில் வியாபார வளர்ச்சியால் புதிய பரிமாணம் ஏற்படும். பண பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வெகுநாள் வாங்க நினைத்த பொருட்களை வாங்க கூடும். இன்று கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளி நீங்கும். இனிமையான பேச்சின் மூலம் எல்லாவற்றையும் நல்ல முறையில் செய்து முடிப்பீர்கள். புத்திரர்கள் வழியில் மனவருத்தம் கொஞ்சம் உண்டாகலாம். மற்றவர்களுடன் வீண் விவாதம் கொஞ்சம் ஏற்படலாம்.

கவனம் இருக்கட்டும். செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி துணிச்சல் உண்டாகும். மற்றவர்களுடன் விரோதம், கௌரவ பங்கம், வீண் அலைச்சல், உடல் உழைப்பு ஆகியவை ஏற்படக்கூடும். கொஞ்சம் பொறுமையாக இருங்கள் அது போதும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் ஆசிரியரின் ஒத்துழைப்பு கிடைக்கும். அதனால் வெற்றி பெறக் கூடிய சூழல் இருக்கும்.

விளையாட்டுத் துறையிலும் ஆர்வம் அதிகரிக்கும். இன்று முக்கியமான பணியை  நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீல நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்க கூடிய  அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் காக்கைக்கு எள் கலந்த சாதத்தை தானமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் நீங்கி அனைத்து விதமான செல்வச் செழிப்பையும் ஏற்படுத்திக்கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்

Categories

Tech |