Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

லாரியை திருப்பிய டிரைவர்…. பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து…. சேதமான பொருட்கள்…!!

ரேஷன் பொருட்களை ஏற்றிவந்த லாரி ஏரிக்கரை பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திண்டிவனம் சந்தைமேடு நுகர்வோர் வாணிப சேமிப்பு கிடங்கில் இருந்து அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த லாரி நொளம்பூர் சாலை வழியாக ஏப்பாக்கம் கிராம ரேஷன் கடைகளை நோக்கி சென்றுள்ளது. இந்த லாரியை தேவபாலு என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் கீழ்கூடலூர் ஏரிக்கரை வளைவில் வைத்து எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருப்பதற்காக தேவபாலு லாரியை வலது புறமாக திருப்ப முயற்சி செய்துள்ளார்.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர ஏரிக்கரை பள்ளத்தில் கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் லாரியின் பின்னால் அமர்ந்திருந்த முருகன் என்பவர் காயமடைந்தார். மேலும் லாரியில் ஏற்றி வந்த அத்தியாவசிய பொருட்கள் சரிந்து விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த முருகனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |