Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக இராசிக்கு ”வாகன யோகம் இருக்கும்” தயக்கம் , பயம் இருக்காது …!!

கடகம் ராசி அன்பர்களே…!! இன்று பெரியவர்களின் வழிகாட்டுதலை பின்பற்றுவீர்கள். தொழில் வியாபாரம் புதிய யுக்தியால் செழித்து வளரும். உபரி வருமானம் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை இன்று நீங்கள் வாங்க கூடும். மனைவியின் அன்பு பாசம் மகிழ்ச்சியை கொடுக்கும். இன்று நன்மை அதிகமாகவே உண்டாகும். பணவரவும் இருக்கும். வாகனம் யோகம் கொடுக்கும்.

பெரியோர்களின் உதவிகள் கிடைக்கும் , மனதில் தைரியம் உண்டாகும். எதிலும் தயக்கமோ , பயமோ இன்று  இருக்காது. தொழில் வியாபாரம் நல்லபடியாக நடந்தேறும். வாக்கு வன்மையால் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும் அரசாங்கம் தொடர்பான காரியங்கள் சாதகமான பலனையே கொடுக்கும். அலைச்சல் மட்டும் கொஞ்சம் அதிகரிக்கும் பார்த்துக் கொள்ளுங்கள். இன்று மாணவர்கள் கொஞ்சம் கடினமாக உழையுங்கள்.பாடங்களை  நன்றாக படியுங்கள்.

இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது வெள்ளை ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் அதிஷ்டத்தைக் கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமல்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் காக்கைக்கு எள் கலந்த சாதத்தை அன்னமாக வழங்குங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்

Categories

Tech |