Categories
தேசிய செய்திகள்

டிச. 31 வரை 144 தடை உத்தரவு….  ‘ஒமைக்ரான்’ அச்சுறுத்தலால் அரசு அதிரடி…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் டிசம்பர் 31 வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருவதால் தமிழகம்,  டெல்லி, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் ஊரடங்கு போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. பிறகு தொற்று படிப்படியாக குறைந்ததை தொடர்ந்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை மாநில அரசு அறிவித்து வந்தது. இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் புதிய கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக அமலில் உள்ள 144 தடை உத்தரவு வரும் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

இது தொடர்பாக, நொய்டா மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: புதிய வகை தொற்று காரணமாக மாவட்டத்தில் 144 தடை உத்தரவு வரும் டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். அரசியல் கூட்டங்கள், மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி மிகவும் முக்கியம். வணிக வளாகங்கள், உடற்பயிற்சி கூடங்கள், 50% வாடிக்கையாளர்களுடன் மட்டும் செயல்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளது.

Categories

Tech |