தனுசு ராசி அன்பர்களே..!! இன்று இனிய அனுபவத்தை உறவினரிடம் சொல்வீர்கள். அவர் மனதில் உங்களைப் பற்றிய நல்ல மதிப்பு உருவாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி பெருமளவில் குறையும். உபரி பண வருமானம் கிடைக்கும். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். இன்று மனநிம்மதியும் சந்தோஷமும் உண்டாகும். ஆடை ஆபரணங்கள் சேரும். மங்கள காரியங்கள் நடைபெறும். பிள்ளைகளுக்கு கல்வியில் இருந்த தடை விலகி செல்லும்.
கடின உழைப்பும் முயற்சிகளில் வெற்றி பெரும் திறனும் அடைவீர்கள். நீண்ட நாட்களாக போட்டிருந்த திட்டம் முழுவதுமாக செயல்பட வாய்ப்பு இருக்கும். எதிர்த்து செயல்பட்டவர்கள் ஒதுங்கி விடுவார்கள். இன்று மேலிடத்தின் செயல்கள் நிம்மதியை பாதிப்பதாக கொஞ்சம் இருக்கும். இன்று எல்லா வகையிலுமே உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.
இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிஷ்ட எண் : 1 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்