நியூசிலாந்து அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணிஏன் கேப்டன் விராட் கோலி டக்அவுட் ஆகி வெளியேறினார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது .அதன்படி தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால் – சுப்மன் கில் ஜோடி களமிறங்கினர். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 80 ரன்கள் குவித்தது .இதில் சுப்மன் கில் 44 ரன்னில் ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய புஜாரா டக் அவுட் ஆகி வெளியேறினார் .இதன்பிறகு 3-வது விக்கெட்டுக்கு கேப்டன் விராட் கோலி களமிறங்கினார். இதில் விராட் கோலி எல்.பி.டபிள்யூ-வில் டக்அவுட் ஆகி வெளியேறினார். புஜாரா மற்றும் விராட் கோலியின் விக்கெட்டுகளை நியூசிலாந்து அணியில் அஜாஸ் பட்டேல் கைப்பற்றினார் .
அதோடு டக் அவுட்டாகி வெளியேறிய விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் மோசமான சாதனை படைத்துள்ளார். இது டெஸ்ட் கேப்டனாக விராட் கோலிக்கு 10-வது டக்அவுட் ஆகும். அதோடு கேப்டனாக அதிகமுறை டக்அவுட் ஆன வரிசையில் விராட்கோலி 2-வது இடத்தில் உள்ளார். இதில் நியூசிலாந்து அணியில் ஸ்டீபன் பிளமிங் 13 முறையும் , தென்னாப்பிரிக்கா அணியில் கிரேம் ஸ்மித் 10 முறையும் டக்அவுட் ஆகியுள்ளனர்.தற்போது இந்த வரிசையில் விராட்கோலி இணைந்துள்ளார்.இதையடுத்து தோனி, ஆதர்டன், குரோஞ்ச் ஆகியோர் 8 முறை டக் அவுட் ஆகி கடைசி இடத்தில் உள்ளனர் .அதே சமயம் இந்திய அணியின் கேப்டனாக ஒரே வருடத்தில் விராட் கோலி 4 முறை டக் அவுட் ஆகி உள்ளார். இதன் மூலம் ஒரு வருடத்தில் அதிக முறை டக் அவுட் ஆன இந்திய அணி கேப்டன்கள் என்ற மோசமான சாதனையில் விராட் கோலி இணைந்துள்ளார்.