மத்திய அரசின் கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தின் மூலமாக 1.5 கோடி விவசாயிகளுக்கு 1.35 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் அவசர தேவைக்காக கடன் பெறும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது கிசான் கிரெடிட் கார்டு. இந்த கிரெடிட் கார்டு மூலம் உத்தரவாதமில்லாத கடன்கள் குறைந்த வட்டியில் வழங்கப்படுகின்றது. தற்போது கிரெடிட் கார்டு செயல்முறைகள் உள்ளிட்ட பல்வேறு கூடுதல் கட்டணங்களை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இதன் மூலமாக விவசாயிகளுக்கு இரண்டு லட்சம் வரை ஊரடங்கு சமயங்களில் கடன் வழங்கப்பட்டு வந்தது.
இந்தத் திட்டத்தின் கீழ் இரண்டு சதவீத வட்டிக்கு கடன் வழங்கப்படுகின்றது. அதன்படி கிசான் கார்டு திட்டத்தில் கால்நடை வளர்ப்பு அல்லது மீன்வளத் துறையில் 4% வட்டியில் இரண்டு லட்சம் வரை கடன் பெறலாம். கடன் பெற விரும்புபவர்கள் pmkisan.gov.in என்ற இணையதளத்தில் கிரெடிட் கார்டு விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விவரங்களை நிரப்பவும். அதை வங்கியில் சமர்பித்தால் அதிகாரிகள் அதனை பரிசோதனை செய்த பின்னர் உங்களுக்கான கடன் தொகையை வழங்குவார்கள்.