கர்நாடக மாநிலத்தில் இருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழக கர்நாடகா எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகா- தமிழக எல்லை வழியாக வாகனங்களில் வருவோர் அனைவருக்கும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே தமிழகம் வர அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக கர்நாடகா எல்லைகளில் அதிகாரிகள் தீவிரமாக கண்காணிப்பு சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் யாரையும் பரிசோதனை இன்றி தமிழகத்திற்குள் விடக்கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது.
Categories