Categories
மாநில செய்திகள்

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு…. வேட்புமனு வாங்க வந்த நிர்வாகி ஓட ஓட விரட்டி அடிப்பு…. என்ன நடந்துச்சு?….!!!!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு வருகின்ற 7ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. இந்த வேட்புமனுத் தாக்கல் நாளை மாலை 3 மணி வரை நடைபெறும் என்றும் வருகின்ற 5ஆம் தேதி காலை வேட்புமனு பரிசீலிக்கப்படும் என்று அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தப் பதவிக்கு போட்டியிட விருப்ப மனு கேட்டு தலைமை அலுவலகத்திற்கு வந்த கட்சியின் உறுப்பினர் ஓமப்பொடி பிரசாத் சிங்கை தொண்டர்கள் அங்கிருந்த அடித்து விரட்டினார்கள். இதுகுறித்து பிரசாந்த் சிங் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது, அதிமுக நிர்வாகிகள் அவரை அங்கிருந்து ஓட ஓட விரட்டி அடித்தனர். இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.அதில் “விதிகளை பின்பற்றாதாலும், முன்மொழிய மற்றும் வடமொழிய ஆட்கள் இல்லாததாலும் ஓமப்பொடி பிரசாத்துக்கு விருப்ப மனு அளிக்கப்படவில்லை.

மேலும் விருப்ப மனு தாக்கல் செய்வோர் மட்டுமின்றி முன்மொழியவர்கள் மற்றும் வழிமொழிபவர்கள் ஆகியோர் 5 ஆண்டுகள் அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக இருக்க வேண்டும் என்று விதி இருக்கிறது” என்று தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்தில் தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஒமபொடி புகார் அளித்துள்ளார்.

Categories

Tech |