Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தடுப்பூசி போடாதவர்கள்…. இங்கெல்லாம் செல்ல முடியாது…. அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனாவை முற்றிலுமாக ஒழிப்பதற்காக மாநில அரசுகள் தடுப்பூசி  போடும்  பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. வாரம் தோறும் மெகா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு மக்களுக்கு இல்லம் தேடி சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் ஒரு சிலர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருக்கின்றனர். இதற்கிடையில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு அச்சுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கை ஆய்வு கூட்டத்தில்இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள் பேருந்து நிலையம், திரையரங்கம், கல்வி நிறுவனங்கள்தொழிற்சாலைகள், பார்கள், ஹோட்டல்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |