தமிழக போலீசாரின் குறைகளை தீர்ப்பதற்காக ‘உங்கள் துறையில் முதல்வர்’ என்ற திட்டத்தின் கீழ் இன்று முதல் டி.ஜே.பி. சைலேந்திர பாபு குறைகளை கேட்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன் அந்தந்த மாவட்ட எஸ்.பி.க்கள் மற்றும் கமிஷனர்கள் தலைமையில் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் நிறைவேற்ற முடியாத குறைகளை மண்டல ஐ.ஜி.களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
மேலும் அந்த முகாமில் நிறைவேற்ற முடியாத குறைகளை டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் நடக்கும் முகாமில் மனு அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த முகாம் இன்று சென்னை வடக்கு மண்டல ஐஜி அலுவலகத்தில் தொடங்குகிறது. அதில் சிறப்புப் பிரிவுகள் வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட போலீசார் மனு அளிக்க உள்ளனர்.
அதனைத் தொடர்ந்து வருகின்ற டிசம்பர் 8-ஆம் தேதி டி.ஜி.பி அலுவலகத்தில் சென்னை நகர் போலிசார் மற்றும் வருகின்ற 9ஆம் தேதி கோவை கமிஷனர் அலுவலகத்தில் மேற்கு மண்டல போலீசாருக்கு நடக்க உள்ளது. மேலும் வருகின்ற 10 ஆம் தேதி காலை 10 மணிக்கு திருச்சி கமிஷனர் அலுவலகத்தில் மத்திய மண்டல போலீசார் மற்றும் 4 மணிக்கு மதுரை கமிஷனர் அலுவலகத்தில் தென்மண்டல போலீசாருக்கு முகாம் நடக்க உள்ளது.