மதுரை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்வதற்கு மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் தடை விதித்துள்ளார்.
கொரோனாவை கட்டுபடுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணியை அரசு செயல்படுத்தி வருகிறது.. ஆனால் சில மாவட்டங்களில் தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.. அதில் குறிப்பாக மதுரை மிகவும் மோசமாக உள்ளது.. அதாவது, மதுரை மாவட்டத்தில் தடுப்பூசி முதல் டோஸ் 71% பேரும் இரண்டாம் டோஸ் 32% பேரும் செலுத்தி கொண்டுள்ளனர்..
மருத்துவ துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூட தடுப்பூசி எடுத்துக்கொள்வதில் மதுரை மோசமான நிலையில் இருப்பதாக ஏற்கனவே கூறியிருந்தார்.. இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் தடுப்பு ஊசி செலுத்திக்கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்வதற்கு மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் தடை விதித்துள்ளார்.
அதன்படி, ரேஷன் கடை, வியாபார நிறுவனங்கள், திரையரங்கு, சூப்பர் மார்க்கெட், கடைவீதிகள், துணிக்கடைகள், திருமண மண்டபங்கள், மார்க்கெட், ஹோட்டல், பார், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், வங்கி உள்ளிட்ட 18 இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது..