Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப இராசிக்கு… “அவப்பெயர் வராதபடி செயல்படுங்கள்”.. வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கை..!!

கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று வாக்குறுதியை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படலாம். அவப்பெயர் வராதபடி செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் கூடுதல் முயற்சியால் சீராகும் பணவரவு குறைந்த அளவில் இருக்கும். அதிகம் பயன் தராத பொருட்களை விலைக்கு வாங்க வேண்டாம். இன்று குடும்பத்தில் திடீர் பிரச்சனைகள் ஏற்படலாம் கவனம் இருக்கட்டும். குடும்ப செலவுகள் அதிகரிக்கும். ஆயுதங்கள் நெருப்புகள் பயன் படுத்தும் போது கவனமாக இருங்கள்.

கணவன் மனைவிக்கு இடையே வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கை வேண்டும். பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டியவை  கொஞ்சம் தாமதப்பட்டு தான் வரும். வீட்டுக்கு தேவையான பொருட்களை இன்று வாங்க கூடும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். இன்று ஆசிரியர்களின் சொல்படி நடந்து கொள்ளுங்கள். சக மாணவர்களிடம் எந்தவிதமான வாக்குவாதங்களும் வேண்டாம்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். வெள்ளை நிறம் அதிஷ்டத்தைக் கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் காக்கைக்கு எள் கலந்த சாதம் கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை :  தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் இளம் பச்சை நிறம்

Categories

Tech |