12அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்த தீயணைப்பு துறையினர் அதனை வனப்பகுதிக்குள் கொண்டுபோய் விட்டுள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் சாலையில் வாய்க்கால் ஒன்று உள்ளது. இந்நிலையில் அதற்கு அருகே உள்ள சுண்ணாம்பு காளவாசல் பகுதியில் நீண்ட மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றுள்ளது. இதனைபார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்து உடனடியாக பெரியகுளம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து தீயணைப்பு நிலைய அலுவலர் பழனிசாமி தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். இதனையடுத்து புதருக்குள் பதுங்கி இருந்த 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பை உயிருடன் பிடித்துள்ளனர். மேலும் தீயணைப்பு துறையினர் அந்த மலைப்பாம்பை சோத்துப்பறை வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இதற்குப்பின் சோத்துப்பறை அருகே உள்ள வனப்பகுதியில் பாதுகாப்பாக கொண்டுபோய் விட்டுள்ளனர்.