Categories
அரசியல்

மக்களே…. இந்த அக்கவுண்ட் மட்டும் இருந்தா போதும்…. ரூ.20 லட்சம் இலவசமா கிடைக்கும்….!!!!

அரசு மற்றும் தனியார் வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அதில் மிக முக்கியமான ஒன்று விபத்து காப்பீடு. சில நிபந்தனைகளுடன் வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கியில் விபத்து காப்பீடாக 20 லட்சம் ரூபாய் கிடைக்கும். நீங்கள் ஏதாவது ஒரு நிறுவனத்தில் வேலை செய்பவராக இருந்தால், புதிதாக வங்கிக்கணக்கு தொடங்க விரும்பினால் பஞ்சாப் நேஷனல் வங்கியில் சம்பள கணக்கு தொடங்கலாம்.

இது ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் தான். மினிமம் பேலன்ஸ் பிரச்சனை எதுவும் இல்லை. குறைந்தபட்ச இருப்பு தொகை இல்லாமல் போனால் அபராதம் எதுவும் விதிக்கப்படாது. அதுமட்டுமல்லாமல் விபத்து காப்பீடு மற்றும் ஓவர் டிராஃப்ட் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் கிடைக்கும். விபத்து காப்பீடு மட்டுமல்லாமல், ஓவர் டிராஃப்ட் வசதியும் இந்த வங்கி கணக்கில் உள்ளது. இதில் மொத்தம் நான்கு பிரிவுகள் உள்ளன.

சில்வர் – மாத சம்பளம் ரூ.10,000 முதல் ரூ.25,000
கோல்டு – மாத சம்பளம் ரூ.25,001 முதல் ரூ.75,000

பிரீமியம் – மாத சம்பளம் ரூ.75,001 முதல் ரூ.1.50 லட்சம்
பிளாட்டினம் – மாத சம்பளம் ரூ.1.50 லட்சத்துக்கு மேல்

சில்வர் பிரிவில் ஒவர் டிராஃப்டாக ரூ.50,000 வரை எடுத்துக்கொள்ளலாம். கோல்டு பிரிவில் ரூ.1.50 லட்சமும், பிரீமியம் பிரிவில் ரூ.2.25 லட்சமும், பிளாட்டினம் பிரிவில் ரூ.3 லட்சம் வரையிலும் எடுக்கலாம்.

Categories

Tech |