Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பழங்குடியினர் பள்ளிகள் விரிவாக்கம்…. இனிப்பான செய்தி…!!!!

தமிழக ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் கயல்விழி  எ தமிழக சட்டப்பேரவையில் 2021-22 ஆம் ஆண்டிற்கான திருத்திய வரவு செலவு கூட்டத்தொடரில் துறையின் மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது, பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 318 உண்டி உறைவிடப் பள்ளிகளில் ரூ.6.13 கோடி செலவில் சுற்றுச்சுவர்களும் மொத்தம் ரூ.21.13 கோடி செலவில் கட்டப்படும் என்று அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கிவரும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் 39 உண்டி உறைவிடப் பள்ளிகளில் 65 வகுப்பறைகள் கட்டுவதற்கு ரூ.1495 லட்சம் மற்றும் 34 உண்டி உறைவிட பள்ளிகளில் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு ரூ.614.16 இலட்சம் ஆக மொத்தம் ரூ. 2109.16 இலட்சம் செலவில் வகுப்பறைகள் மற்றும் சுற்றுச்சுவர் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள, நிர்வாக அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

 

Categories

Tech |