டெல்லியில் அளவுக்கதிகமான காற்று மாசு காரணமாக அனைத்து பள்ளிகளும் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது. காற்று மாசுபாட்டின் காரணமாக மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் ஹரியான மாநிலத்தில் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாறுபாடு துறை முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில் டெல்லி ஹரியானா மாநிலத்தின் உள்ள நான்கு மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மறு உத்தரவு வரும் வரை மூடியிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் அனைத்து கட்டுமான பணிகளுக்கும் ஹரியானாவில் முழுமையான தடை அமல் படுத்த படுவதாகும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத பிளம்பிங் வேலைகள், உட்புற அழகு வேலைப்பாடுகள், எலக்ட்ரிக்கல் வேலைகள், மர வேலைப்பாடுகளுக்கு எந்த ஒரு தடையும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளது.