மீனம் ராசி அன்பர்களே..!! இன்று சாதனை நிகழ்த்தும் வாய்ப்பு உங்களை தேடி வரக்கூடும். பணிகளை திறம்பட நிறைவேற்றுவீ ர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை அளவு சிறப்பாக இருக்கும். நிலுவைப்பணம் வசூலாகும். நண்பருக்கு தேவையான உதவிகளை புரிவீர்கள். வீண் அலைச்சல் அதிகமாகவே இன்று இருக்கும். கவனமாக இருங்கள். புத்தி கூர்மையுடன் செயல்படுவது எதிர்கால முன்னேற்றத்திற்கு உதவும். எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையி டாமல் இருப்பதும் நன்மையை கொடுக்கும்.
தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் தடை ஏற்படலாம். திட்டமிட்டு செய்வதன் மூலம் சாதகமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. எதிர்பாராத அலைச்சல் கொஞ்சம் இருக்கும். இன்று எந்த வகையிலும் நீங்கள் பொறுமையை கடைபிடிப்பது ரொம்ப சிறப்பு. இன்று கணவன் மனைவிக்கு இடையே சின்ன சின்ன பூசல்கள் ஏற்படலாம் பார்த்துக்கொள்ளுங்கள். பொறுமையை கையாளுங்கள். இன்று மாணவர்கள் கல்வியில் கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களைப் படியுங்கள்.
கூடுமானவரை எப்பொழுதும் சொல்வது போலவே படித்த பாடத்தை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பாருங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் அதிஷ்டத்தைக் கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் காக்கைக்கு எள் கலந்த சாதத்தை அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்